காற்றாலை மின்சாரத்தை அரசு உற்பத்தி செய்யாமல் தனியாருக்கு தாரை வார்ப்பு - பொள்ளாச்சியில் சீமான் புகார்

தமிழக விவசாயிகளை பாதிக்கும் மீத்தேன் திட்டத்தை காவேரி ஆற்றங்கரையில் மட்டுமே செயல்படுத்த வேண்டுமா?, கங்கை ஆற்றங்கரையில் செயல்படுத்தலாம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர்கட்சியின் வேட்பாளர் சுரேஷ் குமாரை ஆதரித்து இன்று பொள்ளாச்சி பல்லடம் சாலை ராஜேஸ்வரி திடலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசும்போது, 10 ஆண்டு பாஜக ஆட்சியில் நாட்டில் எதுவும் வளர்ந்து விடவில்லை. மோடியின் தாடி மட்டுமே வளர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக சேர்ந்த 39 எம்பிக்கள் மக்களுக்காக எதுவும் பேசவில்லை. மீத்தேன் திட்டத்தை தமிழக விவசாயிகளை பாதிக்கும் காவேரி ஆற்றங்கரையில் மட்டுமே செயல்படுத்த வேண்டுமா?, கங்கை ஆற்றங்கரையில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்தலாம் என்று கேள்வி எழுப்பினார்.

காற்றாலை, சூரிய ஒளி மற்றும் கடல் அலை மின்சாரத்தை அரசை உற்பத்தி செய்யாமல், தனியாருக்கு தாரை வார்த்து இருப்பதாகவும், தேர்தல் பரப்புரையின் போது சீமான் குற்றம் சாட்டி பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...