எம்ஜிஆர், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் முடக்கம் - தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் புகார்

மாணவர்களுக்கு இலவச மடிக்க கணினி, தாலிக்கு தங்கம், இலவச ஸ்கூட்டி திட்டம் மற்றும் திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வந்தது என்று அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேசினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் பூளவாடி பிரிவு அரசமரம் டி எஸ் கார்னர் மற்றும் புது பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று அதிமுக ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது தாராபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.



ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் கூறுகையில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் திமுக அரசு முடக்கிவிட்டது.

இதில் மாணவர்களுக்கு இலவச மடிக்க கணினி, தாலிக்கு தங்கம், இலவச ஸ்கூட்டி திட்டம் மற்றும் திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வந்தது. திமுக அரசு ஏற்றவுடன் மூன்று வருடங்களில் அனைத்து திட்டங்களையும் முடக்கிவிட்டது. ஆனால் தற்போது பள்ளி மாணவர்களை சீரழிக்கும் வகையில் மாணவர்களுக்கு தேவையான மிட்டாய்களில் போதை பொருள்களை கலந்து விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் பள்ளி குழந்தைகளின் எதிர்காலத்தை சீரழித்து பணம் சம்பாதிக்க வேண்டுமா என கூறினார். இதை தொடர்ந்து திமுக நிர்வாகி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது வெட்ட வெளிச்சமாக தெரிந்துள்ளது.



மேலும் லாட்டரி சீட்டுகள் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தடை விதித்தார். ஆனால் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. 650 கோடியை லாட்டரி நிறுவன அதிபர் கட்சி நிதியாக வழங்கியுள்ளார். இந்த பணம் யாருடையது அனைத்துமே உங்களுடையது. நீங்கள் வாங்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் லாட்டரி சீட்டுகள் அனைத்தும் லாட்டரி சீட்டு நிறுவனத்திற்கு சென்று சேர்கிறது. ஆனால் எதுவும் விழுகாது என்று பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...