தமிழ்நாட்டு மக்கள் நலன் பற்றி சிந்திக்கும் ஒரே கட்சி அதிமுக தான்- காங்கேயத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேச்சு

கலைஞர் கருணாநிதி சாராயத்தை வைத்து இந்த தலைமுறையை காலி செய்தார். அவர்களுடைய மகன் ஸ்டாலின் வந்து அடுத்த தலைமுறையை போதைப்பொருள் மற்றும் கஞ்சாவை வைத்து காலி செய்து வருகிறார் என அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் விமர்சித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட திருவிக நகர் மற்றும் ஏசி காலனி பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் இன்று காலை 6 மணி முதல் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக காங்கேயம் நகர செயலாளர் வெங்கு ஜி. மணிமாறன் தலைமையில் நகர பொருளாளர் கந்தசாமி முன்னிலையில் மாவட்ட பொருளாளர் கிஷோர் குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் ஈரோடு அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் கூறுகையில், இரட்டை இலையும், அதிமுகவும் இருக்கும் வரை தமிழ்நாட்டில் மக்கள் நலன் பற்றி சிந்திக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என்றும், இதற்கு நேர் மாறாக இருக்கும் மக்கள் விரோத ஆட்சி திமுக அரசு என்றும், இதுவரை எந்த மக்கள் நல திட்டங்களையும் செய்யவில்லை. புரட்சித்தலைவி அம்மா ஆட்சியிலும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியிலும் செயல்படுத்தப்பட்ட எந்த நலத்திட்டங்களையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை.



தமிழகத்தில் சாராய ஆலைகள் அதிக அளவில் திமுக இடம் தான் உள்ளது. அதனால் மதுக்கடைகளை மூடுவதாக கூறிவிட்டு அதிக அளவில் திறந்து வைத்துள்ளனர். கலைஞர் அவர்கள் சாராயத்தை வைத்து இந்த தலைமுறையை காலி செய்தார்கள். அவர்களுடைய மகன் ஸ்டாலின் வந்து அடுத்த தலைமுறையை போதைப்பொருள் மற்றும் கஞ்சாவை வைத்து காலி செய்து வருகிறார். மேலும் விலைவாசி வியர்வை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...