கோவை மாநகரின் பசுமை பரப்பை அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டு வருவதாக தகவல்

பசுமை பரப்பை அதிகரிக்கும் பணியில் தொண்டு நிறுவனங்கள், இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை ஒன்றிணைத்து பணிகளை செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளின் பிரதான சாலைகளின் இரு பகுதிகளிலும் மரக்கன்றுகள் நட்டு, மாநகரின் பசுமை பரப்பை அதிகரிக்க செய்ய கோவை மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.இந்த முயற்சியை மாநகராட்சியின் பூங்காக்கள் கமிட்டி முன்னெடுக்கின்றது.



மேலும் இந்த பணியில் தொண்டு நிறுவனங்கள், இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை ஒன்றிணைத்து பணிகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இதை எவ்வாறு செய்வது என்பதற்கான ஆய்வில் இந்த கமிட்டி ஈடுபட்டுவருகின்றது. இதை ஒரு ஆய்வறிக்கையாக தயார் செய்து கோவை மாநகராட்சியின் மாமன்றதின் முன்னர் சமர்பித்து ஒப்புதல் பெற்ற பின்னர் இதன் பணிகள் துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...