வால்பாறையில் தீ விபத்தில் வீடுகளை இழந்த உரிமையாளர்களுக்கு திமுக நிர்வாகிகள் நேரில் ஆறுதல்

தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு திமுக நகர செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையிலான நிர்வாகிகள் தேவையான உணவுப் பொருட்களை வழங்கி, எஸ்டேட் நிர்வாகத்திடம் கூறி தங்குவதற்கு மாற்று வீடுகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே நல்லா காத்து எஸ்டேட் பகுதியில் நேற்று தீப்பற்றி எரிந்து ஐந்து வீடுகள் சேதம் அடைந்தன. வீடுகளில் இருந்த அனைத்து பொருள்களும் சேதம் அடைந்து வீட்டு உரிமையாளர்கள் சோகமடைந்தனர். எஸ்டேட் பகுதியில் நீண்ட ஆண்டுகளாக வேலை செய்து சேர்த்து வைத்த பொருள்கள் அனைத்தும் தீயால் கருகி போனதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.



இதை தொடர்ந்து வால்பாறையில் திமுக நகர செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் 15 வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன் மற்றும் நகர துணைத் தலைவர் செந்தில்குமார், பால்பாண்டி, சரவண பாண்டியன், வினோத், srs சுரேஷ், டென்சிங் மற்றும் பலர் அப்பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து ஆறுதல் செரிவிதனர்.

அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தந்தனர். மேலும் அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கினர்.தங்குவதற்கு இடம் எஸ்டேட் நிர்வாகத்திடம் கூறி மாற்று வீடுகள் வழங்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...