காங்கேயம் அருகே ஓலப்பாளையத்தில் காரும் அரசு பேருந்தும் மோதும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்

நேற்று அதிகாலை காரும், அரசு பேருந்துந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஓலப்பாளையத்தில் நேற்று அதிகாலை காரும், அரசு பேருந்துந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர், நல்லிக்கவுண்டர் நகர், புது நகர் 7வதுவீதியை சேர்ந்த சந்திரசேகரன்-சித்ரா தம்பதியினர் தங்களது 60வது திருமண விழவிற்கு மகன்கள் சசிதரன் 30, இளவரசன் 26 மற்றும் மருமகள் ஹரிவி வித்ரா 30. பேத்தி ஷாக் ஷி (3 மதம்) குழந்தையுடன் திருக்கடையூர் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்தனர்.



வெள்ளகோவிலை அடுத்த ஓலப்பாளையம் அருகே எதிரே வந்த அரசு பேருந்து கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த 6 பேரில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் மூத்த மகன் சசிதரன் படுகாயங்களுடன் மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

இறந்த 5 பேரின் சடலங்களை காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து காங்கேயம் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் வெள்ளகோவில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது அதிகாலையில் நடந்த இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் தற்போது காங்கேயம் பகுதிகளில் உள்ள சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...