ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தாராபுரம் வடதாரையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

இஸ்லாமிய பெருமக்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவியும், கை கொடுத்தும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தனர். சிறப்பு தொழுகை முடிவில் உலக அமைதி வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றுரமலான் மாத நோன்பு. நோன்பின்போது இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பார்கள். ரமலான் மாதம் முதல் நாள் தொடங்கி 30 நாட்களும் கடுமையாக நோன்பு கடைபிடிக்கும் இஸ்லாமியர்கள், மற்றொரு கடமையான ஏழை-எளியோருக்கு ஜகாத் உதவிகளை வழங்கி வருவார்கள்.

ரமலான் 30 நாள் நோன்பு முடிவடைந்த பிறகு, ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் ரமலான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். அதன்படி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் அதிகாலை முதலே மசூதிகளுக்கு சென்று தொழுகை நடத்தினர்.



இதனைத்தொடர்ந்து இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து 'ஈதுல் பித்ர்' என்னும் பெருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பெரிய பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தாராபுரம் வட தாரையில் உள்ள ஈத்கா மைதானத்துக்கு சென்றனர்.

இதில் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் சிறப்பு தொகுதிகளில் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து இஸ்லாமிய பெருமக்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவியும், கை கொடுத்தும் ரம்ஜான் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ரம்ஜான் சிறப்பு தொழுகை முடிவில் உலக அமைதி வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...