திமுக தேர்தல் வாக்குறுதியாக மகாலட்சுமி திட்டத்திற்கு வருடம் ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் - வெள்ளகோயிலில் திமுக வேட்பாளர் பிரச்சாரம்

தேர்தல் வாக்குறுதியாக இந்திய கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் ஏழை எளிய குடும்பங்களின் அத்தியாவசிய செலவுகளில் ஒன்றான எரிவாயு கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 500 ஆக குறைக்கப்படும் என்று திமுக வேட்பாளர் பிரகாஷ் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோயில் நகர பகுதிகளில் இன்று ஈரோடு நாடளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ்பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார். அதிகாலை 6 மணி அளவில் துவங்கிய தேர்தல் பிரச்சாரம் வார்டு வாரியாக வெள்ளகோவில் பகுதியில் உள்ள 21 வார்டுகளிலும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இந்நிகழ்விற்கு வெள்ளகோயில் நகர செயலாளர் சபரி எஸ் முருகானந்தம் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு மாவட்ட நான்காம் மண்டல தலைவர் இலா பத்மநாபன் முன்னிலை வைத்தார். களத்தில் திமுக வேட்பாளர் பிரகாஷ் பேசியதாவது, வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு இன்று வெள்ளகோவிலில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி உள்ளோம். தேர்தல் வாக்குறுதியாக இந்திய கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் ஏழை எளிய குடும்பங்களின் அத்தியாவசிய செலவுகளில் ஒன்றான எரிவாயு கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 500 ஆக குறைக்கப்படும்.



மேலும் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட மதிப்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூபாய் 70 க்கு விற்பனை செய்யப்படும். மகளிருக்கான முக்கிய திட்டமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மகாலட்சுமி திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். திட்டத்தின் மூலம் பெண்களுக்கு வருடம் ரூபாய் ரூ. 1 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும்.

ஏற்கனவே உள்ள மகளிர் உரிமை தொகை திட்டம் அடுத்து ஆட்சிக்கு வரும் பட்சத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1500 ஆக கூட வழங்கும் வாய்ப்புள்ளது. மேலும் பல விதமான திட்ட உதவிகளையும் அனைத்து பஞ்சாயத்து ஊராட்சி,நகராட்சி மாநகராட்சி பகுதிகளில் வழங்கப்பட்டது. மேலும் வெள்ள கோயிலுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கண்டிப்பாக நிறைவேற்றி தரப்படும் எனவும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...