தாராபுரத்தில் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

சிறப்பு தொழுகை முடிந்தவுடன் வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் துண்டு பிரசுரங்களை வழங்கி திமுக வேட்பாளர் பிரகாசுக்கு வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட இறைச்சி மஸ்தான் நகர் பகுதியில் பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை இன்று நடைபெற்றது. சிறப்பு தொழுகை முடிந்தவுடன் வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் துண்டு பிரசுரங்களை வழங்கி ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.



மேலும் இந்நிகழ்ச்சியில் தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் மற்றும் திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம் மற்றும் வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...