இது உள்ளூர் மக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கிடையாது - உடுமலையில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பிரச்சாரம்

கடந்த 10 ஆண்டுகால பாரத பிரதமர் மோடி ஆட்சி காலத்தில், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் அனைத்து வீடுகளுக்கும் கழிவறை வசதி, தண்ணீர் வசதி, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றால் பலர் பலன் அடைந்துள்ளனர் என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள வாளவாடி பகுதியில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜனுக்கு ஆதரவாக தாமரை சின்னத்தில் பொதுமக்களிடையே சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வாக்குகள் சேகரித்தனர்.



அப்போது அவர் பேசியதாவது,



கடந்த 10 ஆண்டுகால பாரத பிரதமர் மோடி ஆட்சி காலத்தில், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் அனைத்து வீடுகளுக்கும் கழிவறை வசதி, தண்ணீர் வசதிகள், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டங்களால் பலர் பலன் அடைந்துள்ளனர். மேலும் நியாய விலை கடைகளில் நபர் ஒன்றுக்கு ஐந்து கிலோ இலவச அரிசையும் வழங்கபட்டு வருகிறது.

விவசாயிகள் நலனை மேம்படுத்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 6 ஆயிரம் ரூபாய் செலுத்தி வருகின்றார். எனவே உள்ளூர் மக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கிடையாது. மத்தியில் டெல்லியில் ஆளும் பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுப்புக்காக தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்தராஜன் பேசும் பொழுது, தமிழகத்தில் திமுக அதிமுக அரசுகள் மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை முறைகேடு செய்து மக்களுக்கு குறைவாக கொடுத்து வருகிறார்கள். மேலும் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதற்காகவே அமைச்சர் சக்கரபாணி மூலம் போடப்பட்ட வேட்பாளர் தான் தற்பொழுது திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி, எனவே இந்த திட்டத்தை பாஜக கண்டிப்பாக முறியடிக்கும் என தெரிவித்தார் வாக்கு சேகரிப்பின் போது கூட்டணி கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி, ஓபிஎஸ் அணி அதிமுக மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...