ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை மத்திய அரசால் மட்டுமே செயல்படுத்த முடியும் - பொள்ளாச்சியில் பாஜக வேட்பாளர் வசந்தராஜன் பேட்டி

500 ஆண்டுகால கோரிக்கையான ராமர் கோயில் கட்டியது போல், 50 ஆண்டு கால கோரிக்கையான ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை மத்திய அரசு மட்டுமே செயல்படுத்த முடியும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் இன்று பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட எரிசனம்பட்டி, தேவனூர்புதூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.



பின்னர் பேசிய அவர், பொள்ளாச்சியில் நேற்று தேர்தல் பரப்புரைக்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை தமிழ்நாடு,கேரளா இரு மாநில அரசுகள் பேசி தான் நிறைவேற்ற முடியும் ஆனால் மத்திய அரசு எதையும் செய்ய முடியாது என்று பேசினார். ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களிடையே பேசிய பாஜக வேட்பாளார் வசந்தராஜன்., 500 ஆண்டுகால கோரிக்கையான ராமர் கோயில் கட்டியது போல் 50 ஆண்டு கால கோரிக்கையான ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை மத்திய அரசு மட்டுமே செயல்படுத்த முடியும். அதிமுக ஆட்சியில் ஏன் செயல்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் கடந்த ஐந்தாண்டுகளாக ஊழல் செய்து வரும் திமுக மற்றும் அதிமுகவை விரட்டியடிக்க வேண்டும் என்றும் வாக்கு சேகரிக்கும் போது பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...