பெண்களுக்கு உலக அளவில் கௌரவம் அளித்தது மோடி அரசு தான் - பெருந்துறையில் வானதி சீனிவாசன் பரப்புரை

மத்திய அரசின் மானியம் மோடி ஆட்சியில் எந்த இடைத்தரகரும் இல்லாமல் மக்கள், பெண்கள், விவசாயிகள், வியாபாரிகள் ஆகியோரின் வங்கி கணக்குக்கு நேரடியாக சேர்கிறது என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.


ஈரோடு: திருப்பூர் பாராளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் A. P. முருகானந்தம் அவர்களை ஆதரித்து பெருந்துறை சட்டமன்ற தொகுதி, குன்னத்தூரில் இன்று (ஏப்ரல்.11) கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தேர்தல் பரப்பரை மேற்கொண்டார்.



அப்போது பேசிய அவர், திருப்பூர் மக்கள் முந்தைய தேர்தல்களில் பாஜக M.P. தரவிட்டாலும், நம் மோடி அரசு பாரபட்சம் பாராமல் பல கோடிக்கணக்கான ரூபாய் அளவில் ESI மருத்துவமனை, வீடுகட்டும் திட்டம், குடிநீர் திட்டம், கழிப்பறைகள், குறைந்த விலையில் மக்கள் மருந்தகம், வேலைத் திறன் மேம்பட இளைஞர்களுக்கு திறன் சார்ந்த பயிற்சி, பாதாள சாக்கடை உட்பட ஸ்மார்ட் சிட்டி திட்டம், கொரானா சமயத்தில் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு நேரடி நிதி மானியம் அளித்தது.

பெண்கள் பெருமை கொள்ளும் வகையில், பெண்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வண்ணம் இந்த வருடம் நடந்த குடியரசு தின விழாவில் எண்ணற்ற பெண்கள் குழுக்களை அணிவகுக்க செய்ய வைத்து பெண்களுக்கு உலக அளவில் கௌரவம் அளித்தது மோடி அரசு.



மத்திய அரசின் மானியம் மோடி ஆட்சியில் எந்த இடைத்தரகரும் இல்லாமல் மக்கள் - பெண்கள், விவசாயிகள், வியாபாரிகள் வங்கி கணக்குக்கு நேரடியாக கொடுத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களை அறிந்த மக்கள் திருப்பூர் பாராளுமன்ற தொகுதியை பாஜகவின் வெற்றி தொகுதியாக மாற்றுவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறி வாக்கு சேகரித்தார். உடன் பாஜக நிர்வாகிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...