கோவையில் தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரம் செய்த பாஜகவினர் -  தட்டிக் கேட்ட திமுகவினரை தாக்கியதாக குற்றச்சாட்டு.

நேற்று இரவு ஆவாரம்பாளையத்தில் தேர்தல் விதிகளை மீறி, 10 மணிக்கு மேல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜகவினர் தட்டி கேட்டு சென்ற தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ள திமுகவினர், அண்ணாமலை மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை:வரும் 17 ஆம் தேதி மாலை 6 மணியுடன் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் முடிவடையவுள்ள நிலையில், கோவையில் அனைத்து கட்சியினரும்.தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்று இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ய கூடாது என்ற தேர்தல் விதியை மீறி, கோவையில் பாஜகவினர் ஆவாரம்பாளையம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், அதை தட்டி கேட்க சென்ற திமுகவினரை, பாஜகவினர் தாக்கிய சம்பவம் அரசியல் களத்தில் பலத்த கண்டனங்களை பெற்று வருகிறது. 

இது குறித்து திமுகவினர் தெரிவிக்கையில், மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 28ஆவாரம்பாளையம் பகுதியில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி, நேற்று 10:40 மணிக்கு பாஜகவினர் வாக்கு சேகரிப்பில்ஈடுபட்டிருந்த பொழுது, தேர்தல் பிரச்சார வீதி மீறல்களை சுட்டிக்காட்டி, அப்பகுதி திமுகவினர் காவல் துறையினரிடம் முறையிட்டுள்ளனர். 



அப்போது அங்கு வந்த பாஜகவினர் , திமுக மற்றும் கூட்டணி கட்சியினரை தாக்கியுள்ளனர். தாக்குதலில், ஜோதிபாசு, மோகன்ராஜி, குணசேகரன், செல்லப்பா, சேகர், சதீஸ், ரங்கநாதன் உள்ளிட்ட திமுக மற்றும் தோழமைக் கட்சி தொண்டர்களுக்கு காயம் ஏற்பட்டது. 

அடிதடி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், என்று திமுக தரப்பு தெரிவித்துள்ளது. 

மேலும், தேர்தல் விதிப்படி பத்து மணிக்கு மேல் வேட்பாளர்கள் மைக்கில் பேசக்கூடாது என்ற விதிமுறை இருந்து வரும் நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் அண்ணாமலை ஒரு வாகனத்தில் கைகூப்பி வளம் வந்ததும், அவரை ஆதரித்து அவர்களது தொண்டர்கள் மைக்கில் தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்ததும், ஒரு வகை பிரச்சாரமே என்று குற்றம் சாட்டிய திமுகவினர், அண்ணாமலை மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். 



சம்பவம் குறித்து வன்மையாக கண்டனங்களை தெரிவித்துள்ள முன்னாள் திமுக எம்எல்ஏ நா. கார்த்திக், தேர்தல் விதிமுறைகளை மீறி பாஜக அண்ணாமலை வாக்கு சேகரித்துள்ளார். இதை தட்டி கேட்ட திமுக மற்றும் இந்திய கூட்டணி கட்சியினரை, பாசிச வெறி பிடித்த பாஜகவினர் கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். 



அண்ணாமலை தேர்தலில் நிற்கும் போதே அடாவடியாக, ஆதிக்க வெறியுடன், விதிமுறைகளை மீறுகின்றார்.தினமும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி தான் பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். கோவையில் எத்தனையோ தேர்தல் நடந்துள்ளது. ஆனால் இப்படி அடாவடியாக யாரும்நடந்து கொண்டதில்லை.

அதிகார திமிரை காண்பித்துள்ள அண்ணாமலையின் செயல்வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே, தேர்தல் ஆணையமும், காவல்துறையும் அண்ணாமலை மீது உரிய வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்தியா கூட்டணியை சேர்ந்த தொண்டர்களை தாக்கியவர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக கோவை மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் கோரிக்கை வைத்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...