தோல்வி பயத்தினால், பாஜக வேறு ஏதும் திட்டம் வைத்திருக்கிறார்களா..?  என்ற கேள்வி எழுந்துள்ளது - கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்.

கோவையில் நேற்று திமுகவினரை, பாஜகவினர் தாக்கிய சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக வேட்பாளர் ராஜ்குமார், தோல்வி பயத்தினால்,  பாஜக வேறு ஏதும் திட்டம் வைத்திருக்கின்றார்களா..? என்ற கேள்வி எழுவதாக குற்றம் சாட்டினார்.


கோவை:நேற்று இரவு, வார்டு 28 சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் பகுதியில், 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற தேர்தல் நடத்தை விதியை மீறி பாஜகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போதுஅதை திமுகவினர் தட்டி கேட்ட போது, திமுகவினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



இது குறித்து விசாரணை மேற்கொண்ட பீளமேடு போலீசார், குணசேகரன் என்பவர் அளித்த புகாரின் பேரில், பாஜகவை சேர்ந்த ஆனந்தன், மாசாணி, லட்சுமி செந்தில், ரங்கநாதன் உள்ளிட்ட நான்கு பேர் மீதுஇந்திய தண்டனை சட்டம் 294பி, 323, 147 உள்ளிட்ட பிரிவின் கீழ் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், அடித்து துன்புறுத்துதல், அநாகரீகமாக வசைபாடுதல் உள்ளிட்ட பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 



இந்த நிலையில், வன்முறை சம்பவம் குறித்து, இன்று காலை, கோவை திமுக அலுவலகத்தில்செய்தியாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், கோவை பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் கோவை மாவட்ட செயலாளர் நா கார்த்திக் பங்கேற்றனர். 



அப்போது பேசிய வேட்பாளர் கணபதி ராஜ்குமார், தோல்வி பயத்தினால் வேறு ஏதேனும் இடையூறு செய்ய பாஜகவினர் திட்டமிடுகிறார்களாஎன்று கேள்வி எழுந்திருக்கிறது என்று தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர்,கோவையை பொறுத்த வரையில் அமைதியை விரும்பும் நகரம். இந்த நிலையில், பாஜக அவர்களது சுயரூபத்தை மெல்லமாக காண்பிக்க ஆரம்பித்திருக்கின்றனர். தோல்வி பயம் அவர்கள் முகத்தில் தெரிகிறது. வெளி மாநிலங்களில் இருந்து ஆட்களை கொண்டு வந்து இங்கு பிரச்சாரம் செய்கின்றோம் என்ற பெயரில் அவர்களை ஊடுருவ வைத்திருக்கின்றார்கள். 

எனவே, இது நேரத்திலும் கலவரத்தை உண்டாக்குமோ என்ற ஐயம் எழுந்துள்ளது.

மேலும், பாஜக பிரச்சாரங்களுக்கு, கல்லூரி மாணவர்களை பயன்படுத்துகிறார்கள். அவர்களை பயன்படுத்தி நோட்டீஸ் தருவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சிறுவர்களை வைத்து சட்டத்திற்கு புறம்பாக பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற விதிமுறைகளை மீறி, பிரச்சாரம் செய்கின்றார்கள். இது சட்டத்திற்கு முரணானது. விதிகளுக்கு புறம்பானது. இது குறித்து பல புகார்கள் பொதுமக்கள் தரப்பில் இருந்தும் வந்துள்ளது. அதற்கான ஆதாரமும் எங்களிடம் இருக்கின்றது. 

இதையெல்லாம், தேர்தல் ஆணையம் கவனிக்கிறதா.? என்று சந்தேகம் எழுந்திருக்கின்றது. காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதாரபூர்வமாக புகார் தந்தும், இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக 10 மணிக்கு மேல் பாஜகவினர் பிரச்சாரம் செய்ததாக புகார் அளித்தும்அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று திமுக தொண்டர்கள் தெரிவிக்கின்றார்கள். 

பாஜக வேறு ஏதும் திட்டம் வைத்திருக்கின்றார்களா..? தோல்வி பயத்தினால் வேறு ஏதேனும் இடையூறு செய்கிறார்களா.? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதற்கான உதாரணமாகவே, நேற்றைய வன்முறை சம்பவம் அமைந்திருக்கிறது. 

எனவே, அமைதியை நிலைநாட்ட, தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை இந்த வன்முறை சம்பவம் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...