காங்கேயத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து பொள்ளாச்சி ஜெயராமன் வாக்கு சேகரிப்பு

என்னை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் உங்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் செய்து தருவேன் என அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வாக்குறுதியளித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட துர்க்கை அம்மன் கோவில், அய்யாசாமி நகர், மூர்த்திரெட்டி பாளையம், தட்டான் தோட்டம், களிமேடு, செம்மங்காலிபாளையம் ஆகிய பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் வாக்கு சேகரித்தார்.



நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமையில், என்.எஸ்.என்.நடராஜ் முன்னிலையில் நகர பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது பேசிய நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேசுகையில், என்னை நாடாளுமன்ற உறுப்பினராக நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் உங்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் செய்து தருவேன் எனவும் கூறினார். உங்களுக்காக இன்னும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்துவதற்காக காத்திருக்கிறேன் என்றும் தெரிவித்தார். இதில், மாவட்ட பொருளாளர் கிஷோர் குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...