ஆத்துப்பாளையத்தில் ஜிஎஸ்டி பற்றி கேள்வி எழுப்பிய பெண் மீது பாஜகவினர் தாக்குதல் – சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சங்கீதா என்பவர் பாஜகவினரிடம் பெண்கள் பயன்படுத்தும் லேப்கின்களுக்கு எதற்காக ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பிய நிலையில், அவரை அநாகிரகமான வார்த்தைகளால் திட்டி பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்துப்பாளையம் பகுதியில் நேற்று இரவு பாஜக வேட்பாளர் ஏ.பி. முருகானந்தத்திற்கு ஆதரவாக பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.

அப்போது அந்த பகுதியில் கடை வைத்து நடத்தி வரும், திராவிடர் விடுதலைக் கழக, மாவட்ட அமைப்பாளர் சங்கீதா என்பவர் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தவர்களிடம் ஜி‌.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். 



குறிப்பாக, பெண்கள் உரிமை பற்றி பாஜக பேசி வரும் அரசு,பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கு ஜிஎஸ்டி வரி ஏன் விதிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இதனால் பிரச்சாரத்துக்கு வந்த சில பாஜகவினர் அப்பெண்ணைஅநாகரீகமான வார்த்தைகளால் திட்டி தாக்குதலில் ஈடுபட முயற்சித்தனர். ஒருகட்டத்தில்வாக்குவாதம் முற்றி, சங்கீதாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை தனது மொபைல் போனில் வீடியோவாக எடுத்த அந்தப் பெண் அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

பிரச்சாரத்தின் போது, ஒரு பெண் வாக்காளரிடம் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்ட பாஜகவினருக்கு, பொதுமக்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...