கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு..!

தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில், பாஜக தலைவர் அண்ணாமலை மீது தேர்தல் நடத்தை விதியை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  முன்னதாக, திமுகவினரை தாக்கிய சம்பவத்தில், 4 பாஜகவினர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: தேர்தல் நடத்தை விடுதியின் படி இரவு 10 மணிக்கு மேல் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்ற விதிமுறையை மீறி பாஜகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், வேட்பாளர் அண்ணாமலை மீதுவழக்குப் பாய்ந்துள்ளது. 

நேற்று இரவு வார்டு 28 சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் பகுதியில் பாஜக வேட்பாளர் மற்றும் தொண்டர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டதும், விதிமீறலை தட்டிக் கேட்க சென்ற திமுகவினரை, பாஜகவினர் தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை 

ஏற்படுத்தியுள்ளது. 



இந்த நிலையில், வன்முறையை அரங்கேற்றிய பாஜகவினர் மீது தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தி வந்த நிலையில்,இந்திய தண்டனை சட்டம் 294பி, 323, 147 உள்ளிட்ட பிரிவின் கீழ் - சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், அடித்து துன்புறுத்துதல், அநாகரீகமாக வசைபாடுதல் உள்ளிட்ட பிரிவில் ஆனந்தன், மாசாணி, லட்சுமி செந்தில், ரங்கநாதன் உள்ளிட்ட நான்கு பேர் மீது பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் அதிகாரி அளித்த புகாரின்படி, தேர்தல் நடத்தை விதியை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர் அண்ணாமலை மீது தேர்தல் நடத்தை விதி மீறல் வழக்கு பாய்ந்துள்ளது. 

தோல்வி பயத்தினால், பாஜகவினர் இடையூறு செய்ய திட்டமிட்டுள்ளனரா..? என்ற கேள்வி எழுந்துள்ளது என்று கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...