திருப்பூரில் காவல்துறையினருக்கான அஞ்சல் வாக்கு சிறப்பு முகாம் - ஆர்வமுடன் காவலர்கள் வாக்கு பதிவு

திருப்பூர் குமரன் சாலையில் இன்று காவல்துறையினருக்காக அஞ்சல் வாக்கு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாமில் திருப்பூரில் பணியில் உள்ள காவலர்கள் தங்களது தபால் வாக்கினை ஆர்வமுடன் பதிவு செய்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் தேர்தல் நாளன்று தங்கள் வாக்கை பதிவு செய்ய முடியாத வகையில் பல்வேறு இடங்களில் பணி செய்யும் சூழல் உள்ளதால் அவர்களுக்கு அஞ்சல் வாக்கு வழங்கப்பட்டு முன்கூட்டியே செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.



அதன்படி திருப்பூர் குமரன் சாலையில் இன்று காவல்துறையினருக்காக அஞ்சல் வாக்கு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாமில் திருப்பூரில் பணியில் உள்ள காவலர்கள் தங்களது தபால் வாக்கினை ஆர்வமுடன் பதிவு செய்தனர். திருப்பூர் பாராளுமன்ற தொகுதி மற்றும் பிற பகுதிகளில் உள்ள காவலர்களும் தனித்தனியே தங்கள் வாக்கை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. அஞ்சல் வாக்கு பதிவை திருப்பூர் மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான பவன் குமார் கிரியப்பனவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...