துடியலூரில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் வாக்குசேகரிப்பு

துடியலூரில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வெளியே வந்தவர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், அதிமுக வேட்பாளர் சிங்க ராமச்சந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டுப்போடுமாறு கேட்டு வாக்கு சேகரித்தார்.


கோவை: கோவை துடியலூரில் உள்ள மசூதியில் தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து கோவை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

கோவை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்து வருகிறார்.



இந்த நிலையில் இன்று கோவை துடியலூரில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வெளியே வந்த 500க்கும் மேற்பட்டவர்களிடம் எம்.எல்.ஏ. அருண்குமார் நோட்டீஸ் விநியோகித்து அதிமுக சார்பில் கோவை தொகுதியில் போட்டியிடும் சிங்க ராமச்சந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டுப்போடுமாறு கேட்டு வாக்கு சேகரித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...