படித்த மாணவர்களுக்கு தகுதிகேற்ப வேலை கிடைக்கவில்லை - வெள்ளகோவிலில் அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்

மக்களிடையே வருமானங்கள் அதிகரிக்கவில்லை. ஆனால் வீட்டு வரி, தண்ணீர் வரி, மின்சார கட்டணம், மளிகை பொருட்கள் கட்டணம் என அனைத்தும் உயர்ந்துள்ளதாக அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டு பகுதிகளில் வெள்ளகோவில் நகர செயலாளர் டீலக்ஸ் மணி தலைமையில் ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் ஆற்றல் அஷோக்குமாரை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்கு காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என். நடராஜ் முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்வில் வெள்ளகோவில் நகராட்சி வார்டு உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.



வெள்ளகோவில் நகராட்சிக்கு உடைபட்ட நாச்சியப்ப கவுண்டர் வலசு, எம்ஜிஆர் நகர், அறிவொளி நகர், திருமங்கலம், உப்பு பாளையம், முத்துக்குமார் நகர், மாப்பிள்ளை கவுண்டர் ஹோட்டல் முன்புறம், திருவள்ளுவர் நகர், அம்மன் கோவில் வீதி, நடேசன் நகர், சொறியக்கினத்துபாளையம், மணிவேல் தியேட்டர், செம்மாண்டம் பாளையம், கரட்டுப்பாளையம், நாச்சிபாளையம், என்.என்.பட்டி, அகலரபாளையம் புதூர், தீத்தாம்பாளையம், சிவநாதபுரம், எல்.கே.சி நகர், PWD அலுவலகம், காமராஜபுரம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணி நடைபெற்றது.



ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொது மக்களிடம் பேசிய ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், ஒரு லாட்டரி சீட்டு நிறுவனத்தின் உரிமையாளர் தேர்தல் நிதியாக ரூ.650 கோடி திமுகவிடம் வழங்கியதாகவும் அந்த பணத்தை எவ்வாறு சம்பாதித்து இருப்பார் என்று கவனியுங்கள். எப்படி சம்பாதிக்கிறார். உங்களுடைய ஒவ்வொருவர் வீட்டிலிருந்து வாயிலையும் வயித்துலையும் அடித்துத்தான் சம்பாதித்து இருப்பார்கள். தினசரி ரூ.100 ரூ.200 என லாட்டரி சீட்டு வாங்குவதால் அந்தப் பணம் வீணாவது உடன் பரிசுத்தொகையும் வரவே வராது.

இதுபோல் செய்யும் காரியம் அனைத்தும் மக்கள் விரோத செயல்கள், மக்களிடமிருந்து காசுகளை சுரண்டும் செயல்தான் செய்து கொண்டுள்ளனர். மேலும் ஒரு அரசு என்றால் விலைவாசியை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். அவர்களுக்கு விலைவாசி என்றால் என்ன என்று தெரியாது எனவும் தெரிவித்தார். மக்களிடையே வருமானங்கள் அதிகரிக்கவில்லை. ஆனால் வீட்டு வரி, தண்ணீர் வரி மின்சார கட்டணம், மளிகை பொருட்கள் கட்டணம் என அனைத்தும் விலை உயர்ந்துள்ளதாகவும், படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு கிடைக்கின்றதா அதுவும் கிடைப்பதில்லை என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...