தாராபுரத்தில் நகரச் செயலாளர் சி.ஆர்.ராஜேந்திரன் தலைமையில் அதிமுகவினர் இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பு

பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள எடுத்துக்கூறி நகரச் செயலாளர் சி.ஆர்.ராஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு ஆதரவாக நகரச் செயலாளர் சி.ஆர்.ராஜேந்திரன் தலைமையில் இரட்டை இலை சின்னத்திற்கு நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.



தாராபுரம் பெரிய கடைவீதியில் உள்ள மரக்கடை பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் அதிமுக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப், அம்மா மினி கிளினிக், உள்ளிட்ட பல திட்டங்களை திமுக அரசு முடக்கியது குறித்தும், திமுக அரசின் தற்போதைய சொத்துவரி, மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, ஆகியவற்றை எடுத்துச் சொல்லியும் துண்டு பிரசுரங்கள் வழங்கி சிறுபான்மை மக்களுக்கு அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அரசில் வழங்கிய நலத்திட்டங்களை எடுத்துச் சொல்லியும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனார்.

இதில் ஏராளமான அதிமுகவினர் மற்றும் எஸ். டி. பி. ஐ. கட்சி தேமுதிக ஆகிய கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...