திருப்பூர் தொழில் துறையினரை சந்திக்கும் முதல்வர் மு க ஸ்டாலின்..!

அவிநாசி, பழங்கரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா மற்றும் திருப்பூர் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.


திருப்பூர்: கோவையை அடுத்து இன்று திருப்பூரில், நீலகிரி மற்றும் திருப்பூர் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

அவிநாசி, பழங்கரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா மற்றும் திருப்பூர் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்கிறார்.

முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் உள்ள தொழில் துறையினருடன் கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளார்.பின்னலாடை, ஆயத்த ஆடை, பொறியியல் துறை சார்ந்த தொழில் முனைவோர் மற்றும் தொழில் அமைப்பினர், முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்கின்றனர். 

மூல பொருட்கள் விலையேற்றம், ஜிஎஸ்டி வரி, ஒன்றிய அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கை உள்ளிட்டவற்றால் கடும் நெருக்கடியில் திருப்பூர் தொழில் துறையினர் தத்தளித்து வரையும் நிலையில் இன்றைய கலந்துரையாடல் நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 

இந்த நிலையிலே தொழில்துறையின் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில், அவர்களின் குறைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிவார். 

அதேபோல, கோவை, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள தொழில் முனைவோர்,முதல்வரை திருப்பூரில் தங்கியுள்ள இடத்தில் சந்திக்கின்றனர்.

இந்த சந்திப்பில், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, வீட்டுவசதி வாரியதுறை அமைச்சர் முத்துசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜி கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...