வெயில் அதிகமாக அடிப்பதால் மூளை ஆவியாகி பேசுகிறார் - முத்தூரில் அண்ணாமலைக்கு பொள்ளாச்சி ஜெயராமன் பதிலடி

எடப்பாடியார் ரோட் ஷோ வந்தால் லட்சம் பேர் வருவார்கள். வெயில் அடிப்பதால் மூளை ஆவியாகி அண்ணாமலை பேசுகிறார் என எடப்பாடி பழனிச்சாமி குறித்த விமர்சனத்திற்கு பொள்ளாச்சி ஜெயராமன் பதிலடி கொடுத்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் முத்தூர் வேலம்பாளையம் ஊராட்சி ராமமூர்த்தி நகரில் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரின் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. வேலம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட அம்மா இணை செயலாளருமான A.S.ராமலிங்கம் முருகவேல் தலைமையில் நடைபெற்றது.

திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்பி.சிவசாமி, நமது அம்மா நாளிதழ் தலைமை ஆசிரியர் கல்யாணசுந்தரம், காங்கேயம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்என்.எஸ்.என்.நடராஜ், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், நகர செயலாளர் டீலக்ஸ் மணி, வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வெங்கடேச சுதர்ஷன் , மாவட்ட அம்மா இணை செயலாளர் ராமலிங்கம், முத்தூர் பேரூர் கழக செயலாளர் முத்துக்குமார் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஏழு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதே பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் திமுக மற்றும் பாஜக கட்சியில் இருந்து விலகி அதிமுகவில்இணைந்தனர். அவர்கள்களுக்கு அதிமுக கழக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.



இந்த பரப்புரை கூட்டத்தில்வாக்கு சேகரித்த ஆற்றல் அசோக்குமார் ஐந்து ஆண்டுகள் வேலைக்காரனாக இருக்க தயாராக உள்ளேன். தேர்தலின் போது மட்டும் கொடுக்கின்ற ரூ.500 ரூ.1000 பணத்தை நம்பி வாக்களிக்காதீர்கள் என்றார். செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன் எடப்பாடி ரோடு ஷோ செல்ல முடியுமா என விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், எடப்பாடியார் நடந்தால் பேரணி நின்றால் மாநாடு என்றும் ஜூன் 4க்கு பிறகு அண்ணாமலையிடம் கேளுங்கள் என தெரிவித்த அவர், அண்ணாமலையின் வெற்றியேதீர்மானிக்கப்படவில்லை எனவும், வெயில் அதிகமாக அடிப்பதால் அவரது மூளை ஆவியாகி பேசி வருகிறார் என பொள்ளாச்சிஜெயராமன் விமர்சித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...