தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு ஆதரவாக தேர்பட்டி ஆதி வாக்கு சேகரிப்பு

ஆற்றல் அசோக்குமார் மக்களுக்காக செய்து வரும் 10 ரூபாய் உணவகம், 10 ரூபாயில் மருத்துவ சிகிச்சை மற்றும் கோவில்கள், அரசு கட்டிடங்கள் பராமரிப்பு ஆகியவற்றை எடுத்துக்கூறி பொதுமக்களிடம் தேர்பட்டி ஆதி வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மனகடவு, ஊராட்சி கொல்லப்பட்டியில் அதிமுகவை சேர்ந்த தேர்பட்டி ஆதி என்ற ஆதித்யன், வீடு வீடாக சென்று அதிமுகவின் சாதனைகளை எடுத்துக் கூறியும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களிடத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஆற்றல் அசோக்குமார் மக்களுக்காக செய்து வரும் 10 ரூபாய் உணவகம், 10 ரூபாய்யில் மருத்துவ சிகிச்சை மற்றும் கோவில்கள், அரசு கட்டிடங்கள் பராமரிப்பு, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை வழங்கி உள்ளதை சுட்டிக்காட்டி ஆதரவு கோரினார்.



மேலும் அனைத்து கிராமங்களுக்கும் ஆற்றல் அசோக்குமாரின் சேவையை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்கியதால் பொதுமக்கள் எவ்வாறு பாதிப்படைந்துள்ளனர் என்பதை எடுத்துக் கூறியும், தாலிக்கு தங்கம், ஆடு, கறவை மாடு, கோழி வழங்கும் திட்டம், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி, கிராமம் தோறும் அம்மா கிளினிக், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா மருந்து பெட்டகம், படித்த பட்டதாரி பெண்களுக்கு 50 ஆயிரம் நிதி உதவி போன்ற எண்ணற்ற திட்டங்களை மீண்டும் கொண்டுவர அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மூலம் நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுத்து தருவதாக வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...