விருகல்பட்டி கூட்டுறவு வங்கியில் முறைகேடு – நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கபோவதாக விவசாயிகள் அறிவிப்பு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விருகல்பட்டி ஊராட்சியில் கருப்பு கொடி ஏற்றி, தேர்தலை புறக்கணிக்க போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே விருகல்பட்டி ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்ட தலைவர், இயக்குனர்கள், செயலர் உதவி செயலாளர் ஆகியோர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருகல்பட்டி மற்றும் ராமச்சந்திராபுரம் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடக்க வேளாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டம், ஆடு மாடுகளுடன் போராட்டம், சாலை மறியல் என பல்வேறு கட்ட போராட்டங்கள் செய்தும் தற்பொழுது வரை எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கப்படவில்லை.



இதனால் தமிழக அரசை கண்டித்தும், மறு பயிர் கடன் வழங்காத்தை கண்டித்தும், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விருகல்பட்டி ஊராட்சியில் கருப்பு கொடி ஏற்றினர். பின்னர் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்தனர். அப்போது தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் இடப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...