வால்பாறை அருகே தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆறுதல்

எஸ்டேட் நிர்வாகத்திடம் தீ பற்றி எறிந்த வீட்டு உரிமையாளர்களுக்கு மாற்று வீடு தர வேண்டும், அவர்களுக்கு நிவாரணம் தரவேண்டும் என்று எஸ்டேட் நிர்வாகத்திடம் சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி வலியுறுத்தினார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பாக நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்களின் ஐந்து வீடுகள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன.



இதில் வீட்டிலிருந்த டிவி, பீரோ கட்டில், துணிமணிகள் பணம், நகை மற்றும் சர்டிபிகேட் மற்றும் உணவுப் பொருள்கள், பாத்திரங்கள் அனைத்தும் தீயில் கருகி சேதம் அடைந்தன. தீ பிடித்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டதால் உயிர் சேதம் இன்றி தப்பினர். இது தொடர்பாக வால்பாறையில் உள்ள பல்வேறு தரப்பினர் அவர்களுக்கு உதவி செய்தனர்.

இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நேற்று அப்பகுதிக்கு நேரில் சென்று அப்பகுதி மக்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.



மேலும் இதுபோன்று தீ விபத்துகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இதுகுறித்து எஸ்டேட் நிர்வாகத்திடம் சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி எஸ்டேட் நிர்வாகத்திடம் தீ பற்றி எறிந்த வீட்டு உரிமையாளர்களுக்கு மாற்று வீடு தர வேண்டும், அவர்களுக்கு நிவாரணம் தரவேண்டும், இது போன்று விபத்துகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நகர செயலாளர் மயில் கணேசன் மற்றும் தோட்ட தொழிலாளர் பிரிவு தலைவர் வீ அமீது மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...