அவிநாசியில் மகளிர் கலந்துரையாடல் நிகழ்ச்சி - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

இலவச கேஸ் இணைப்பு வழங்கும் திட்டம், பெண்களுக்கு கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தருவது, சுய உதவி குழுவினர்களுக்கான வளர்ச்சியை உறுதி செய்வது, பெண்களின் பொருளாதார வளர்ச்சியை உணர்த்தும் விதமாக அவர்களுக்கு கடன் உதவிகளை வழங்குவது போன்ற திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார்.


திருப்பூர்: நீலகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை ஆதரித்து அவிநாசி பகுதியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்ற மகளிர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.



பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பெண்கள் நலத் திட்டங்களான அனைத்து பெண்களுக்கும் இலவச கேஸ் இணைப்பு வழங்கும் திட்டம், பெண்களுக்கு கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தருவது, சுய உதவி குழுவினர்களுக்கான வளர்ச்சியை உறுதி செய்வது, பெண்களின் பொருளாதார வளர்ச்சியை உணர்த்தும் விதமாக அவர்களுக்கு கடன் உதவிகளை வழங்குவது போன்ற திட்டங்களை எடுத்துரைத்தார்.



மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகள் தங்கள் அனுபவங்களை பெண்களின் மத்தியில் எடுத்துரைத்தது பெரும் வரவேற்பை பெற்றது. அங்கு கூடி இருந்த பெண்கள் தாமரை சின்னத்திற்கு வாக்களிப்போம் என்று ஒருமித்த குரலில் கூறினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...