போதை பொருளும், வசூலும் நடத்தக் கூடிய திமுகவுக்கு ஆதரவு தரக் கூடாது - அவிநாசியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

தமிழ்நாடு அரசு பெண்களை எப்படி நடத்துகிறது. எல்லா பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொல்லிவிட்டு இன்று தகுதி உடைய பெண்களுக்கு என்று மாற்றி சொல்கிறார்கள் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், நீலகிரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட அவிநாசியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு தாமரை சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் விதமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளிருடன் கலந்துரையாடல் நடத்தினார்.



நிகழ்ச்சியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., உள்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மத்திய நிதி அமைச்சரிடம் தங்கள் பகுதிக்கு மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்தும், அந்தத்த பகுதிகளில் உள்ள குறைகள் குறித்தும் பேசினார்கள்.



தொடர்ந்து அவர்களுக்கு பதிலளித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், இங்குள்ள பெண்களே மோடி அய்யாவின் திட்டங்கள் கிடைத்து உள்ளதாக கூறுகிறார்கள். பெண்களே கூறுவதால் மற்றவர்களும் நம்புகிறார்கள். எல்லோருக்கும் மோடி அய்யாவின் திட்டங்கள் வந்து சேர்கிறது என்பதை பல பெண்கள் பேசி உள்ளனர். தாழ்த்தப்பட்டோர் வாழக் கூடிய தொகுதிகளில் இது போன்ற திட்டங்கள் வந்து சேருமா என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது.

நீங்கள் எம்.பி., எம்.எல்.ஏ., கொடுக்காவிட்டாலும் உங்கள் வீட்டுக்கு ஒரு டாய்லெட் அல்லது குடிநீர் அல்லது நல்ல வீடு வேண்டும் என்றால் டெல்லியில் உள்ள மோடி அய்யா ஏழை மக்களுக்கு திட்டங்களை அனுப்பி உள்ளார். சுய உதவி குழு பெண்களுக்கு திட்டமிட்டு, பணம் கொடுத்து அனுப்புகிறார்கள். 2010 முதல் இந்த சுய உதவி குழுக்களுக்கு ஒரு கட்சி சார்ந்து இருந்ததால மட்டுமே பணம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

மோடி ஐயா எல்லாருக்கும் திட்டங்கள் தருகிறார். அரசியல் தலைவர்களாக வரக் கூடியவர்கள் யாராக இருக்க வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டும். 'குடும்ப அரசியல் தான் செய்வேன் மக்கள் ஆதரவு இருக்கிறது அது தப்பில்லை என்ற நிலையில் முதல்வர் பேசுகிறார். ஆனால் மோடி ஐயா அப்படி செய்யவில்லை. மத்திய அமைச்சர் முருகன் இங்கு நிற்கும் நிலையில், நீங்கள் வேறு யாருக்காவது ஓட்டு போடுவதை விட, முருகன் அவர்கள் வந்தால் என்னென்ன நல்லது நடக்கும் என நினைத்து பாருங்கள். பார்லிமென்ட் பெரியதாக கட்டியது தேவையா என்கிறார்கள். மோடி ஐயா நம் ஒவ்வொருவருக்கும் வீடு கட்டி தருகிறார். பார்லிமென்ட் நல்லா இருக்கணும், சாதாரண குடும்ப பெண்ணும் நல்லா இருக்கணும் என செயல்படக் கூடியவர் மோடி ஐயா.



நீலகிரியில் தி.மு.க மாவட்ட செயலாளருக்கும், எம்.எல்.ஏ.,வுக்குமே ஒத்துப்போவதில்லை. ஆனால் மோடி ஐயா எல்.முருகனின் வீட்டில் பொங்கல் கொண்டாடினார். இதையெல்லாம் நாம் நியாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். பின் தங்கியவர்களுக்கான திட்டங்கள் தருபவர் தான் மோடி. பெண்களை முன்காட்டி திட்டங்கள் வகிக்கிறார் மோடி. பெண்களை தேர்ந்தெடுத்து டிரோன் டிரெய்னிங் கொடுக்கிறார். சுய உதவி குழு பெண்களுக்கு டிரோன் பயிற்சியும், கை செலவுக்கு பணமும் தர இருக்கிறார். விவசாயத்தில் புரட்சி செய்யக் கூடிய அளவுக்கு டிரோன் உபயோகிக்க முடியும். அதை பெண்கள் கையில் தான் கொடுக்கிறார் மோடி ஐயா. இதன் மூலம் பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வருமானம் வரும். பெண்களின் நிலை உயரும்.

தன்மானத்தோடு பெண்களுக்கு லட்சம் ரூபாய் வருமானம் வர யோசிக்கிற தலைவர் மோடி. சிறு வியாபாரிகளுக்கு எந்த கேரண்டியும் இல்லாமல் முத்ரா லோன் கிடைக்கிறது. இதில் பயனடைவார்கள் பெண்கள். இந்த தமிழ்நாடு அரசு பெண்களை எப்படி நடத்துகிறது. எல்லா பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொல்லி இன்று தகுதி உடைய பெண்களுக்கு என்று மாற்றி சொல்கிறார்கள். இந்த மாதிரி நாடகம் எதுவும் செய்ய மாட்டார். சென்னை நகர மேயர் எவ்வளவு அவமானப்படுத்த முயல்கிறார்கள். அவர்களை கட்டுப்படுத்துவதில்லை. நம்ம தமிழ்நாட்டில் போதையால் ஒரு பெண் அவமானப்பட நேர்வது கண்டு மனம் வலிக்கிறது. 

முதலீடு எடுத்து வருபவர்களிடம் வசூல் செய்ய மட்டும் வருகிறார்கள் தி.மு.க வினர். போதை பொருளும், வசூலும் நடத்தக் கூடிய தி.மு.க வுக்கு ஆதரவு தரக் கூடாது. அனைவரும் தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். என்று பேசினார். 

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...