தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவை மருதமலை கோவிலில் குவிந்த பக்தர்கள்

தமிழ் புத்தாண்டு, சித்திரை திருநாளை முன்னிட்டு கோவையில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் இன்று அதிகாலையில் இருந்தே அதிகளவிலான பக்தர்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.


கோவை: தமிழ்ப்புத்தாண்டு இன்று (ஏப்ரல்.14) கொண்டாடப்படுகிறது. சித்திரைக்கனி என்று கொண்டாடப்படும் இன்றைய தினம் மக்கள் பலரும் இல்லங்களில் செல்வம் பெருக வேண்டும், வாழ்க்கை செழிக்க வேண்டும் என முக்கனிகளையும், தங்கம், வெள்ளி நாணயங்கள், நகைகளை வைத்து வழிபடுவர். மேலும் அனைத்து கோவில்களுக்கு சென்று வழிபடுவர்.



அதன்படி, தமிழ் புத்தாண்டு, சித்திரை திருநாளை முன்னிட்டு கோவையில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் இன்று அதிகாலையில் இருந்தே அதிகளவிலான பக்தர்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர்.



பல்வேறு பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவிலில் படிக்கட்டு வழியில் செல்வதற்கு 7 மணியில் இருந்து தான் அனுமதி என்பதால் படிக்கட்டு வழியில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். சிலர் தடுப்புகளை தாண்டி குதித்து சென்றனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்குபோலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...