துடியலூரில் பட்டியளினத்தைச் சேர்ந்தவரின் வீட்டில் உணவருந்திய பாஜக வேட்பாளர் அண்ணாமலை

செங்கல் சூளை பிரச்சனைக்கு 4ம் தேதிக்கு பிறக்கு ஒரு நிரந்தர தீர்வு காணப்படும். படித்த இளைஞர்களுக்கு உள்ளூரில் வேலை வாய்ப்பை உருவாக்கித் தரவுள்ளோம். பாலமலையில் உள்ள சில கிராமங்களுக்கு ரோடு வசதி இல்லை முதல் வேலையாக சாலை அமைக்கப்படும் என்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.



இன்று கோவை கோவனூர் பகுதியில் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவிட்டு தனது பரப்புரையை தொடங்கினார். தொடந்து அங்கிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.



அங்கு பேசிய அண்ணாமலை, அனைவரும் கடுமையாக உழைத்துக்கொண்டுள்ளீர்கள். கோவையில் தாமரையை மலரச் செய்ய வேண்டும். பாரத பிரதமர் 400 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தாண்டி அமர வேண்டும். அந்த 400ல் முதலாவதாக கோவை தொகுதி இருக்க வேண்டும். கோவையில் ஏன் மாற்றம் வேண்டும் என்றால் மோடி 10 ஆண்டு காலம் கடுமையாக உழைத்தும் கூட அதை இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்களா என்றால் இல்லை. 10 ஆண்டுகளில் 2 உறுப்பினர்கள் இருந்து கோவையில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவவில்லை. 3 வது முறையாக மோடி ஆட்சியில் அமரும் போது அதன் வலிமையை பயன்படுத்தி கோவைக்கு முழு வளர்ச்சி கொண்டு வரப்படும். 5 ஆண்டு காலங்களில் அதனை கொண்டு வருவோம் என உறுதிமொழி அளிக்கிறோம்.

இப்பகுதியில் நிலவி வரும் செங்கல் சூளை பிரச்சனைக்கு 4ம் தேதிக்கு பிறக்கு ஒரு நிரந்தர தீர்வு காணப்படும். திரவிட முன்னேற்ற கழக அரசு பிள்ளையையும் கில்லி விட்டு தொட்டிலையும் ஆட்டும் பழக்கத்தை கொண்டுள்ளனர். படித்த இளைஞர்களுக்கு உள்ளூரில் வேலை வாய்ப்பை உருவாக்கித் தரவுள்ளோம். பாலமலையில் உள்ள சில கிராமங்களுக்கு ரோடு வசதி இல்லை முதல் வேலையாக சாலை அமைக்கப்படும். ஏரி குளங்களை தூர் வாரி நீரை கொண்டு வந்து விவசாய பிரச்சனைக்கு தீர்வு காண்போம். தாய் கிராமங்களுக்கு ஒரு விளையாட்டு மையம் அமைத்துத் தரப்படும்.

எனவே 3வது முறையாக மோடி ஆட்சியில் அமரும்போது இங்கிருந்து உங்கள் பிரச்சனைகளை எடுத்துக் கூறி அதற்கு தீர்வு காணும் உங்கள் வீட்டுப் பிள்ளை அண்ணாமலையை வெற்றிபெறச் செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து 100 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் புடைசூழ நாயக்கன்பாளையம், கூடலூர் கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், என்.ஜி.ஜி.ஒ காலனி, துடியலூர் விநாயகர் கோவில் பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதில் கூடலூர் கவுண்டம்பாளையத்தில் சுமார் 20 அடி உயரமுள்ள மாலை கிரேன் மூலம் அவருக்கு போடப்பட்டது. அதேபோல பெரியநாயக்கன்பாளையம் கரிவரத பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். என்.ஜி.ஜி.காலனி கேட் அருகே அந்தப் பகுதியில் முக்கியஸ்தர்களை சந்தித்து பாரதிய ஜனதா கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.



அதன் பின்னர் துடியலூர் முத்துநகர் பகுதியில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அவர் அந்த பகுதி மக்களுடன் ஜமாப் அடித்தார்.



அதன் பிறகு அந்தப் பகுதியில் உள்ள பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஆனந்தி என்பவர் வீட்டில் அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.



முன்னதாக துடியலூர் விநாயகர் கோவில் அருகே ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் மற்றும் தேமுதிக கட்சியை சேர்ந்தவர்கள் அண்ணாமலை முன்னிலையில் பிஜேபி கட்சியில் இணைந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...