கோவை மருதமலை கோவிலில் யானைகள் முகாமிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல்

வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி நேற்று 10க்கும் மேற்பட்ட யானைகள் மருதமலை கோவில் படிக்கட்டு பாதையில் முகாமிட்டது. யானைகள் உலாவிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


கோவை: தமிழ்ப் புத்தாண்டு சித்திரை திருநாளை முன்னிட்டு கோவை மருதமலை கோவிலில் பக்தர் கூட்டம் இன்று ஏப்ரல்.14 அலைமோதியது. பக்தர்கள் படிக்கட்டு வழியாகவும், மலைப் பாதை வழியாகவும், கோயில் பேருந்து மூலமாகவும் சென்று தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு தண்ணீர் தேடி நேற்று (ஏப்ரல்.13) 10க்கும் மேற்பட்ட யானைகள் கொண்ட கூட்டம் படிக்கட்டு பாதையில் முகாமிட்டது. இதனால் நேற்று அந்த வழியாக செல்லும் பக்தர்களுக்கு வனத் துறையினர் தடை விதித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.



அதனை தொடர்ந்து இன்று (ஏப்ரல்.14) பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனிடையே மருதமலையில் யானைகள் உலாவிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...