பணம் காசு சம்பாதிப்பதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை - தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேச்சு

வருடா வருடம் நான்காயிரம் கோடி ரூபாய் பணம் மத்திய அரசுக்கு திமுக அரசு திருப்பி அனுப்பி வருகிறது. அந்தப் பணத்தை எடுத்து வேலை செய்வதற்கு ஆள் இல்லை என்று அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ரங்கம்பாளையம் பிரிவு, கோனேரிப்பட்டி பிரிவு, பொன்னிவாடி, அவிநாசிபுரம் காலனி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிமுக ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் திறந்த வெளி வாகனத்தில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



இந்நிகழ்ச்சியில் அதிமுக மூலனூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம் தலைமையிலும், பொன்னிவாடி ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் முன்னிலையிலும் நடைபெற்றது.



அதிமுக ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேசுகையில், அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா இருக்கும்போது பெண்களுக்கு நான்கு கிராம் தங்கத்தை திருமணத்திற்கு வழங்கினார். அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு வந்த போது நான்கு கிராம் தங்கத்தை எட்டு கிராம் தங்கமாக மாற்றி திருமணமான பெண்களுக்கு வழங்கினார்.

கடந்த மூன்று வருடங்களாக தாலிக்கு தங்கம் யாருக்குமே திமுக அரசு கொடுக்கவில்லை என்றும், மேலும் படித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக 50000 வழங்கப்பட்டது. தற்போது ஒரு கிராம் 55 ஆயிரம் மற்றும் திருமண உதவித்தொகை 50000 என ஒரு லட்ச ரூபாய் கொடுக்க வேண்டிய திமுக அரசு கொடுக்காமல் திட்டத்தையே முற்றிலுமாக நிறுத்திவிட்டது. திமுக அரசு மதுக்கடை மூலம் அதிக கடைகளை திறந்து வைத்து வருமானம் ஏற்றி வருகின்றனர்.

அதேபோல் போதை பொருள், கஞ்சா உள்ளிட்டவைகளையும் விற்பனை செய்து வருகிறது. அனைத்து விலைவாசி உயர்வுகளையும் திமுக அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும் கூறினர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் உள்ள திமுக அரசுக்கு உங்களுக்கு எதிராக உள்ளது. உங்களுக்கு யார் வேலை செய்வார்கள் என பாருங்கள். எனது சொந்தக் காசில் கடந்த சில வருடங்களாக மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறேன். மத்திய அரசிடமிருந்து பல்லாயிரம் கோடிகள் தமிழகத்திற்கு வருகிறது. இதையெல்லாம் பார்த்து மக்களுக்காக செய்வதற்கு திமுக அரசுக்கு நேரமில்லை.

இதனால் அந்தப் பணம் முழுவதும் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. வருட வருடம் நான்காயிரம் கோடி ரூபாய் பணம் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பி வருகின்றனர். அந்தப் பணத்தை எடுத்து வேலை செய்வதற்கு ஆள் இல்லை. இதனால் அந்த பணம் முற்றிலுமாக திரும்பி மீண்டும் மத்திய அரசுக்கு சென்று விடுகிறது. நான் பதவிக்காக வரவில்லை உங்களுக்காக ஐந்து வருடம் வேலை செய்ய வந்துள்ளேன். பணம் காசு சம்பாதிப்பதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை.

அப்படி இருந்திருந்தால் நான் வேற தொழிலை பார்த்து இருப்பேன். இப்பவே நான் சொந்த காசில் செலவு செய்து வருகிறேன். சொந்த காசையும் செலவு செய்ய தயாராக உள்ளேன். அதை தொடர்ந்து மத்திய அரசிடம் இருந்து வரும் பணத்தையும் வாங்கி உங்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளேன் என தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...