கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வாகன தணிக்கை, பரிசு பொருட்கள், பணம் உள்ளிட்டவை கண்காணிப்பது பற்றி ஆய்வு கூட்டம்

வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள், மதுபானங்கள், டோக்கன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறதா என தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் பி.ஆர்.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் வாகன தணிக்கை, பரிசு பொருட்கள், பணம் உள்ளிட்டவைகள் கண்காணிப்பது தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் பி.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையில் இன்று (ஏப்ரல்.14) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதி செலவின பார்வையாளர்கள் கீது படோலியா உம்மே பர்டினா அடில், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி செலவின பார்வையாளர் சிவ் பிரதாப் சிங், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் தமிழ்நாடு தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் பி.ஆர்.பாலகிருஷ்ணன் தெரிவித்ததாவது, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள், மதுபானங்கள், டோக்கன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறதா என தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். பறக்கும் படைக்குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் உட்பட கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அனைவரும் சோதனைச் சாவடிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனையினை முறையாக மேற்கொள்ள வேண்டும். வங்கிகளில் சந்தேகத்திற்கிடமாக பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றனவா என்பதனை வங்கியாளர்கள் மற்றும் அமலாக்கத்துறை அலுவலர்கள் தொடர்ந்து முறையாக கண்காணித்திட வேண்டும்.



வங்கிகளில் வழக்கத்திற்கு மாறாக மற்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் பணம் எடுத்தல் டெபாசிட் செய்தல் உள்ளிட்டவைகள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். பறக்கும் படைக்குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் உட்பட கண்காணிப்பு பணியில் ஈடுபடும் குழுக்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏதும் இல்லாமல் வாகனங்களை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், 50,000 ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு வரும் பொதுமக்களிடம் ஆவணங்கள் சரிபார்த்து இடையூறு இல்லாமல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

ஆம்புலன்ஸ் மற்றும் அரசு வாகனங்களில் முறையற்ற முறையில் பணம் கொண்டு செல்லப்படுகின்றதா என்பதையும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் காவல்துறை பறக்கும் படைக்குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் உட்பட குழுக்கள் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மதுபானங்கள், போதைபொருட்கள், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவைகள் குறித்தும், ஆவணங்கள் சரிபார்ப்பு பின்னர் திருப்பி வழங்கப்பட்டவைகள் குறித்தும் வேட்பாளர்களின் விளம்பரங்கள் சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளுர் கேபிள் தொலைக்காட்சிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதையும் பி.ஆர்.பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...