மோடி வந்தால் மீண்டும் தேர்தல் வராது – அலங்கியத்தில் சுப.வீரபாண்டியன் பேச்சு

விளங்கோடு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற விஜயதாரணி, நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். தற்போது அவருக்கு நாடாளுமன்ற தொகுதி கொடுக்கப்படவில்லை என்பதால் அவர் ஏமாந்து போய் உள்ளார் என்று சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் கிராமத்தில், இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில் திமுக ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து அலங்கியத்தில் திராவிட கழகத்தின் தலைவர் சுப. வீரபாண்டியன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையிலும், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும், ஒன்றிய செயலாளர் எஸ்.வி. செந்தில் குமார் முன்னிலையில் பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசுகையில், ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பாரதிய ஜனதா கட்சியில் வாய்ப்பு கிடைக்காததால் மட்டுமே அதிமுகவில் சேர்ந்து தற்போது வாய்ப்பு பெற்று இருக்கிறார். இருப்பினும் ஈரோடு தொகுதியை பொறுத்தவரை அதிமுகவும் பாரதிய ஜனதா கட்சியும் ஒன்றுதான். ஈரோடு தொகுதியை பொறுத்த வரை இலைக்கும் தாமரைக்கும் வித்தியாசமே கிடையாது.



விளங்கோடு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற விஜயதாரணி என்பவர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். தற்போது அவருக்கு நாடாளுமன்ற தொகுதி கொடுக்கப்படவில்லை. இதிலும் அவர் ஏமாந்து போய் உள்ளார். மோடி அரசு ஒரே மதம் தான் இருக்க வேண்டும் என நினைக்கிறது. மற்றவர்களை பிரிக்க நினைக்கிறார்கள்.

தமிழ் மொழிக்கு வெறும் 74 கோடி அதேபோன்று சமஸ்கிருத மொழிக்கு 1487 கோடி கொடுத்துள்ளனர்.இது நமக்கான அரசு என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். நமது இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழ் மொழிக்கு வருடத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் வந்து சேரும் என தெரிவித்தார். அதேபோன்று எல்லா மொழிகளுக்கும் சமமாக கொடுக்க வேண்டும் என நாம் சொல்லி வருகிறோம். மோடி வந்தால் மீண்டும் தேர்தல் வராது யார் வெற்றி பெற்று வந்தால் தேர்தல் வரும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும் இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல் என்றும் கூறினர். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை நீங்கள் அடித்து துரத்த வேண்டும் என்றால் நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் ஓட்டு போடுவது மட்டுமே என்று கூறினார். தாமரைக்கு இடமே இல்லை என உரக்கச் சொல்லுங்கள் இலையும் காணாமல் போகும், இலையும் தாமரையும் ஒன்றுதான் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...