உடுமலையில் என்.ஆர்.சி மதுபான கூடத்தை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

என்.ஆர்.சி மதுபான கூட்டத்தில் இருந்த நாற்காலிகள், தண்ணீர் கேன்கள் மற்றும் பெயர் பலகையை அடித்து நொறுக்கி சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தாராபுரம் சாலையில் நான்காவது வார்டு யூ எஸ்.எஸ்.காலனி குடியிருப்புக்கு மிக அருகாமையில் என்.ஆர்.சி மதுபானக்கூடம் செயல்பட்டு வருகின்றது. இந்த மதுபான கூடத்தில் மது அருந்தும் குடிமகன்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் தினம் தோறும் சிறுநீர் கழிப்பது, பெண்களை தகாத வார்த்தையில் திட்டி கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில் இன்று மதுபான கூடத்தில் மது அருந்திவிட்டு வந்த நபர் அருகில் உள்ள வீட்டிற்கு முன்பு சிறுநீர் கழித்தார். அந்தநபரை அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கேட்கும்போது இருவருக்கும் இடையேதகராறு ஏற்பட்டதாக கூறபடுகின்றது. இது குறித்து என்.ஆர்.சி மதுபான கூடத்தில் பெண்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கேட்டபோது பார் ஊழியர்களுக்கும் பெண்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.



இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தனியார் மதுபான கூடத்திற்கு சென்று அங்கிருந்த நாற்காலிகள், தண்ணீர் கேன்கள் மற்றும் பெயர் பலகையை அடித்து நொறுக்கினர். பின்னர் உடுமலை தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த உடுமலை டிஎஸ்பி தலைமையில் சுகுமாறன் தலைமையில் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தனியார் மதுபான கடையை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும் இல்லை என்றால் கலைய மாட்டோம் என கூறிய நிலையில் வலுக்கட்டாயமாக பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்களை காவல்துறையினர் கைது செய்தால் பரபரப்பு ஏற்பட்டது. உடுமலையில் தனியார் மதுபான கடையை அகற்றக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் ஐம்பதுக்கு மேற்பட்டோரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...