அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு உடுமலை அருகே உள்ள புத்தர் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு புத்தர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினரும், புத்த சீடருமான பிக்கு மெளரியா கலந்துகொண்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே எலையமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட செல்வபுரம் கிராமத்திற்கு அருகில் மலை அடிவார பகுதியில் புத்த சீடர்கள் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் புத்தர் கோவில் அமைத்து பூஜை செய்து அன்னதானம் வழங்கி வருகின்றனர்.



இந்த நிலையில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினரும், புத்த சீடருமான பிக்கு மெளரியா கோவிலுக்கு வருகை புரிந்தார். அதன் பின் உலக அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை பேணுதல், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் எந்த ஒரு வன்முறை இல்லாமல் நடைபெற வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் தமிழ் புலிகள் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருப்பதி, மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், மடத்துக்குளம் ஊடகப்பிரிவு நம்பிராஜன், எலையமுத்தூர் திமுக கிளை தலைவர் பழனிச்சாமி, கோவை ஆனந்தன், புத்தர் கோவில் ஆலய நிர்வாகிகள் காளியப்பன், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...