ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு உள்ளிட்ட மத்திய அரசின் இரட்டை தாக்குதலால் பனியன் தொழில் பாதிப்பு - திருப்பூரில் கமலஹாசன் பேச்சு

மக்கள் நலனே குறிக்கோளாய் கொண்டது 2 தத்துவங்கள். செய்ததை சொல்லி கொண்டு வருபவரை நம்பலாம். செய்யாததை சொல்வதும், செய்வதாய் பொய் சொல்வதுமாய் வருபவரை நம்ப கூடாது. கலைஞர் சொல்வதை செய்பவர் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட மத்திய அரசின் இரட்டை தாக்குதலால் திருப்பூரில் பனியன் துறை பாதிக்கப்பட்டுள்ளது என கமலஹாசன் பிரசாரத்தின் போது பேசினார். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயன் போட்டியிடுகிறார். அவருக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து நேற்று இரவு திருப்பூர் பாண்டியன் நகரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, பரப்புரைக்கு நான் வந்ததற்கான காரணம் நாடு காக்கும் தருணம் என்பதால் வந்துள்ளேன். தனக்கான தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல் உலகளாவிய உடை தேவைகளை பூர்த்தி செய்யும் நகரம் இந்த திருப்பூர். திருப்பூரில் பனியன் தொழில் மந்தமாக உள்ளது. இதற்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி, பெட்ரோல் விலை உயர்வு காரணம். இந்த மந்தமாக உள்ள போதே ரூ.40 ஆயிரம் கோடி வர்த்தகம் என்றால் 10 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும். அதிக வருவாய் ஈட்டு தரும் திருப்பூரை ஒழுங்கா கவனிக்க முடியவில்லை.



இதில் 75 புதிய நகரம் எப்படி பிரதமர் உருவாக்குவார். மக்கள் நலனே குறிக்கோளாய் கொண்டது 2 தத்துவங்கள். செய்ததை சொல்லி கொண்டு வருபவரை நம்பலாம். செய்யாததை சொல்வதும், செய்வதாய் பொய் சொல்வதுமாய் வருபவரை நம்ப கூடாது. கலைஞர் சொல்வதை செய்பவர். திருப்பூர் மாநகராட்சியாக மாறுவதற்கு கலைஞர் முக்கிய காரணம். நிறைய பாலங்கள் சாலைகள் கொடுத்துள்ளார். மத்திய அரசு உதவியை தடை செய்தால் தொகுதியில் வேலை தடைபடும். ஒரு எம்.பிக்கு ரூ.5 கோடி கொடுப்பார்கள். இங்கு 6 தொகுதி. 6 தொகுதிக்கு ஒரு கோடி கிடையாது. அதற்கும் ஜி எஸ் டி போடுவது மத்திய அரசு.

ஜி.எஸ்.டி. போடும் போது சினிமா துறையில் இருந்து நான் குரல் கொடுத்தேன். ஜி.எஸ்.டி. நல்ல திட்டம் என்றால் அந்த வரி திட்டத்தை சொல்லி பாரதிய ஜனதாவினர் ஓட்டு கேட்டிருக்கலாம். ஜி.எஸ். டி வேண்டாம் என முழங்கியவர்களில் நானும் ஒருவன். ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு உள்ளிட்ட மத்திய அரசின் இரட்டை தாக்குதலால் கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூர் பனியன் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சு விலை உயர்வு நூல் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் உலக அளவில் முதல் இடத்தை நெருங்கி கொண்டிருந்ததை இந்தியாவை பின்னால் தள்ளியது பங்களாதேஷ். அங்கு வரி குறைவு. பங்களாதேசில் இருந்து நூல் துணியை இறக்குமதி செய்கின்றனர்.

இந்த உதாரணம் போதும் ஒன்றிய அரசு என சொன்னாலும் இது மக்களுடன் ஒன்றாத அரசு. எனக்கென்று எதிர்பார்ப்பு இல்லாமல் நமக்காக வந்திருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், செல்வராஜ் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...