திமுக வேட்பாளர் பிரகாசுக்கு ஆதரவு கேட்டு தாராபுரம் ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்த திமுகவினர்

முகமதியா நகரில் உலமா சபை தலைவர் முஜிபுர் ரஹ்மான் தாவூதியையும், உலமா சபை நிர்வாகிகளையும் சந்தித்து திமுக வேட்பாளர் பிரகாசுக்கு ஆதரவு அளிக்குமாறு தாராபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் சென்று நிர்வாகிகள் வாக்கு கேட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் எதிர்வரும் ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாசை ஆதரித்து திமுகவினர் தாராபுரம் நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் நகர செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஈடுபட்டு வருகின்றனர்‌.

இந்நிலையில் தாராபுரம் ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகளை அதன் அலுவலகமான முகமதியா நகரில் வைத்து உலமா சபை தலைவர் முஜிபுர் ரஹ்மான் தாவூதியையும், உலமா சபை நிர்வாகிகளையும் தாராபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், கோவை மாநகர மாவட்ட துணை செயலாளருமான கோட்டை அப்பாஸ்தலைமையில் இன்று நகரச் செயலாளர் முருகானந்தம் நகர மன்ற தலைவர் பாப்புகண்ணன், மாவட்டத் துணைச் செயலாளர், கூட்டணி கட்சி நிர்வாகிகளான காங்கிரஸ் நகர தலைவர் செந்தில்குமார்,ஆகியோர் சந்தித்து இந்தியா கூட்டணி வேட்பாளர் கே.இ.பிரகாஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டனர்.



இந்நிகழ்வில் அயலக அணி மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லாஹ், ஆறாவது வார்டு கிளைக்கழக செயலாளர் அக்பர் பாஷா, ஐந்தாவது வார்டு பிரதிநிதி நாசர்உசேன், ஆறாவது வார்டு கவுன்சிலர் முபாரக் அலி, ஜீவா ஷாஜகான், பூத் பொறுப்பாளர்கள் மௌலானா, சையது இப்ராஹிம், ஜாபர் சாதிக், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் சிவசங்கர், நகர சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஏ.ஆர்.அபுதாகிர், 6வார்டு அவைத் தலைவர் அப்துல் ஹமீது, பேங்க் அப்பாஸ், கறிக்கடை அபூபக்கர் சித்திக், தாஜ் ஜாபர் சாதிக், பாவா மைதீன், முகமது தாரிக், தொண்டரணி ஷாஜகான், மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...