கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு வீட்டில் வருமான வரித்துறை சோதனை

மூன்று கார்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மீனா லோகுவின் இல்லத்தில் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 1.5 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் பணம், பொருள், ஆவணம் என எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியின் 46வது வார்டு கவுன்சிலரும், கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவருமான மீனா லோகு வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று (ஏப்ரல்.15) திடீர் சோதனை நடத்தினர்.

மூன்று கார்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீனா லோகுவின் இல்லத்தில் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 1.5 மணி நேரமாக இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் பணம், பொருள், ஆவணம் என ஏதும் கைப்பற்றப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருப்பினும் வீட்டிலிருந்த கார், அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கோவையில் நடந்த இந்த சோதனை காரணமாக திமுகவினரிடையே பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...