கோவை உப்பிலிபாளையம் என்டிசி மில் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

நான்கு ஆண்டுகளாக சட்ட விரோதமாக முடக்கப்பட்டுள்ள NTC ஆலைகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்காத பாஜக அரசுக்கு தொழிற்சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.


கோவை: கோவை, மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள என்டிசி மில் முன்பு அண்ணாமலை பொய் பேசுவதை கண்டித்து, உப்பிலிபாளையம் என்டிசி மில் முன்பு அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இன்று (ஏப்ரல்.15) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் கட்சியின் எஸ்.எம்.எஸ் தொழிற்சங்க தலைவர் ராஜாமணி தலைமையில் நடைபெற்றது. இதில் நான்கு ஆண்டுகளாக சட்ட விரோதமாக முடக்கப்பட்டுள்ள NTC ஆலைகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்காத பாஜக அரசை கண்டித்தும், 10-ஆண்டுகளாக கோவை தொழில் வளர்ச்சிக்கு ஒன்றும் செய்யாத பாஜக பிரதிநிதியாக தற்போது அண்ணாமலை வேட்பாளராக நின்று கொண்டு கோவையை அபிவிருத்தி செய்வேன் என்று சொல்வதை நம்ப இயலாது என்றும், ஏற்க மாட்டோம் எனச் சொல்லியும் என்.டி.சி காலி நிலங்களை தனியாருக்கு விற்கிற நோக்கத்தில் அண்ணாமலை தொழில்துறை இடம் பேசியதை கண்டித்தும், என். டி. சி. நிலங்களை ஒருபோதும் தனியாருக்கு தாரை வார்க்க விடமாட்டோம் என கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் இந்த நிகழ்வில் அமைப்பு செயலாளர் மனோகரன், ஏஐடியுசி சங்கத்தின் மூத்த தலைவர் எம். ஆறுமுகம், சிஐடியு தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் பத்மநாபன், MLF தொழிற்சங்கத்தின் மூத்த தலைவர் மு.தியாகராஜன், INTUC சங்கத்தின் துணைத் தலைவர் வெங்கடசாமி, NDLF தொழிற்சங்கத்தின் தலைவர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...