பல்லடத்தில் நான்கு பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை – நீதிபதி அதிரடி தீர்ப்பு

மது குடிப்பதை தட்டிக்கேட்ட நான்கு பேரை வெட்டிக்கொன்ற நான்கு குற்றவாளிகளுக்கும் தலா 4 ஆயுள் தண்டனையும், தலா ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி சொர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார்.


திருப்பூர்: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி இரவு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் வசித்து வந்த செந்தில்குமார், மோகன்ராஜ், ரத்தினம்மாள் மற்றும் புஷ்பவதி ஆகியோர் தனது வீட்டின் அருகே மது அருந்திய நபர்களை தட்டிக் கேட்டதற்காக வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

கொலையில் தொடர்புடைய, செல்லமுத்து, 24, ஐயப்பன், 52, ராஜ்குமார், 27, சோனை முத்தையா, 30 மற்றும் வெங்கடேஷ், 29 என 5 பேரை போலீசார் கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இதில் விசாரணையின் போது தப்பிக்க முயன்றதாக குட்டி என்கின்ற வெங்கடேஷ் என்பவனை போலீசார் கால் முட்டியில் சுட்டு பிடித்தனர். குட்டி என்கின்ற வெங்கடேஷ் கோவையில் அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்போடு சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர், 800 பக்கத்திற்கு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.



இந்நிலையில் நேற்று திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கள்ளக்கிணறு கொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி சொர்ணம் நடராஜன் 55 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டு 4 கொலைக்கு சேர்த்தே முதல் குற்றவாளி ராஜ்குமாருக்கு 4 ஆயுள் தண்டனை 1000 அபராதம், இரண்டாவது குற்றவாளி செல்லமுத்துவுக்கு 4 ஆயுள் தண்டனை 1000 அபராதம்,

மூன்றாவது குற்றவாளி சோனை முத்தையாவிற்கு 4 ஆயுள் தண்டனை 1000 அபராதம், 4வது குற்றவாளி அய்யப்பனுக்கு 4 ஆயுள் தண்டனை 1000 அபராதமும்,

குற்றவாளிகளுக்கு அடைக்கலம் வழங்கிய 5 வது குற்றவாளி வெங்கடேஷ்க்கு இரண்டு 3 ஆண்டு தண்டனை 2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...