மோடி தமிழகத்திற்கு 90 முறை வந்தாலும் தேர்தலில் பாஜகவின் தோல்வியை தடுக்க முடியாது - திருப்பூரில் வைகோ பேச்சு

தமிழ்நாட்டை பாதுகாக்கவும், இந்தியாவை பாதுகாக்கவும் இந்திய கூட்டணி ஆட்சியில் அமர வேண்டும். இந்துத்துவா மற்றும் சனாதன கூட்டத்திற்கு முடிவு கட்ட மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுப்பராயன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருப்பூர் காந்திநகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திராவிட இயக்கத்தின் திருப்புமுனையாக அமைந்தது திருப்பூர். சுப்பராயன் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.



தமிழ்நாட்டை பாதுகாக்கவும், இந்தியாவை பாதுகாக்கவும் இந்திய கூட்டணி ஆட்சியில் அமர வேண்டும். இந்துத்துவா மற்றும் சனாதன கூட்டத்திற்கு முடிவு கட்ட மக்கள் முடிவு செய்துவிட்டனர். இந்த வெற்றி காஷ்மீர் வரை எதிரொலிக்கும். பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு 9 முறை வந்துவிட்டார். அவர் 9 முறையல்ல 90 முறை வந்தாலும் பாரதிய ஜனதா தோல்வியடைவதை யாராலும் தடுக்க முடியாது. மோடி கண்ணியமாக பேச வேண்டும். மாறாக தமிழக மக்கள் புண்படும் வகையில் பேசி வருகிறார். நடுநிலையாக பேசாமல் கடுமையாக பேசி வருகிறார்.

திராவிட இயக்கத்தை அழிப்பதாக தெரிவித்து வருகிறார். திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. தற்போது தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் வந்து நாடகம் ஆடி வருகிறார். தமிழர்களை ஏமாற்ற முடியாது. தமிழர், வளம், இனம் பண்பாடு பாதுகாக்க இந்திய கூட்டணி வெற்றி பெரும் எனக் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...