தாராபுரத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றிய போலீசாருக்கு பாராட்டு

உயிருக்கு போராடியவரை காப்பாற்றிய இரண்டு போலீசாரையும் நேரில் அழைத்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானீஸ்வரி பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்தில் கடந்த 14ம் தேதி இரவு 9 மணிக்கு பேருந்துக்காக காத்திருந்த நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் பழனி(36) என்பவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

இதனைப்பார்த்த தாராபுரம் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கோபால் மற்றும் நந்தகோபால் ஆகியோர் மயங்கி விழுந்தவரை CPR முதலுதவி சிகிச்சை செய்து அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உயிரை காப்பாற்றினர்.



இந்த மனிதநேயமிக்க செயலை பாராட்டும் வகையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானீஸ்வரி இன்று (16.04.2024) மேற்படி இருவரையும் மேற்கு மண்டல காவல் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...