திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து தாராபுரம் காவல் நிலையம் அருகே அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்

எடப்பாடி பழனிச்சாமி சசிகலா அம்மாவிற்கு மட்டும் துரோகம் செய்யவில்லை. ஒட்டுமொத்த தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.


திருப்பூர்: ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திமுக பிரகாஷை ஆதரித்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல் நிலையம் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், 40க்கு 40 பகுதியிலும் இந்தியா கூட்டணி ஜெயிப்பது உறுதி என தெரிவித்துள்ளார்.

அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், இங்கு வந்திருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கும் கலைஞரின் மேலான உடன்பிறப்புகளே அனைவருக்கும் வணக்கம். கடந்த சட்டமன்ற தொகுதி பிரச்சாரத்திற்கு நான் வந்திருந்தேன். அப்போது 2000 வாக்குகள் வித்தியாசத்தில் சட்டமன்ற உறுப்பினரை வெற்றி பெற செய்தீர்கள். அதேபோன்று நாடாளுமன்ற தேர்தலிலும், ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் அவர்களை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

இங்கு வேட்பாளர் பிரகாஷ் இல்லை உதயநிதி ஸ்டாலின் நான்தான் நிற்கிறேன். சுமார் மூன்று லட்சம் அதிக அளவில் வாக்குகளை பெற்று வெற்றி பெற செய்ய வேண்டும். கொரோனா காலகட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனா ஊசியை செலுத்திக்கொண்டு கோவையில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தார் என்ற பெருமை நமது தமிழக முதலமைச்சருக்கு உண்டு என தெரிவித்தார்.



எடப்பாடி பழனிச்சாமி சசிகலா அம்மாவிற்கு மட்டும் துரோகம் செய்யவில்லை. ஒட்டுமொத்த தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளார் என குற்றசாட்டினார். ஒவ்வொரு மகளிரும் மாதம் 900 ரூபாய் சேமித்து வருகிறீர்கள். 18 லட்சம் குழந்தைகள் காலை உணவு திட்டத்தின் பயன்பெற்று வருகின்றனர். காலை உணவு திட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம் மாணவ மாணவி பயன் பெற்று வருகின்றனர்.

தேர்தல் முடிந்த ஐந்து மாதத்தில் அனைத்து மகளிர்களுக்கும் நிச்சயமாக மகளிர் உரிமைத்தொகை வாங்கித் தருவேன் என தெரிவித்தார். தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குறுதிகள். தாராபுரம் வட்டாரத்தில் அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு நிலங்களை ஜீரோ ஜீரோ நில மதிப்பு என அறிவித்த உத்தரவை உங்களது அமைச்சர் கயல்விழி அவர்களும், சாமிநாதன் அவர்களும் எங்களது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்த பிரச்சனை குறித்து முதலமைச்சர் இடம் எடுத்துச் சொல்லி நடவடிக்கை எடுக்கப்படும். தாராபுரம் பகுதியில் உள் விளையாட்டு அரங்கம் விரைவில் கட்டி முடிக்கப்படும். கொளத்துபாளையம் கூட்டுறவுக்கு சொந்தமான 54 ஏக்கர் காலியாக உள்ள இடத்தில் சிப்காட் தொழில் பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உப்பாறு அணைக்கு அமராவதி அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படும். இது எல்லாம் நாம் சொல்லி இருக்கக்கூடிய வாக்குறுதிகள் நாம் என்னென்ன செய்துள்ளோம் தேர்தல் வாக்குறுதி சொல்லியுள்ளோம் என்னென்ன செய்துள்ளோம். தாராபுரம் பகுதியில் பெண்களுக்கு கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும்போது பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தரக்குறைவாக பேசுவதாக குற்றச்சாட்டு இதுகுறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.

அதற்கு துறை சார்ந்த அமைச்சரிடம் எடுத்துச் சொல்லி நடவடிக்கை எடுப்பதாகவும், மேலும் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். திட்டத்தை முதல்வர் கொடுத்துள்ளார். இதற்கு எல்லாம் தலைவரை குறை சொல்வீர்கள். வரப்பாளையம் பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் இடம் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர். அதற்கு உதயநிதி ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் இருந்தால் நிறைவேற்றித் தரப்படும் இல்லையென்றால் தேர்தல் முடிந்தவுடன் பேருந்து நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மோடியை இனிமேல் 29 பைசா எனத்தான் பெயர் வைத்து கூப்பிட வேண்டுமென பொதுமக்களிடம் பேசினார். இனிமேல் மோடி வந்தால் 29 பைசா எப்படி இருக்கிறார் என கேளுங்கள். ஜூன் மூன்றாம் தேதி கலைஞரின் பிறந்த நாள் வருகிறது. அன்று நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 புதுச்சேரி உட்பட அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி சார்பில் வெற்றி பெற்று பிறந்தநாள் பரிசாக கலைஞர் கருணாநிதி காலடியில் வைக்க வேண்டுமென கேட்கிறேன் என உரையை முடித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...