கோவில்பாளையம் அக்ரஹார சாமக்குளத்திற்கு மேலும் 2 புதிய நீர்வழிப்பாதைகள் கண்டுபிடிப்பு

மழைநீர் வரும் பாதைகளில் இயந்திரங்களைக் கொண்டு குப்பை, மண்மேடு, புதர்கள் ஆகியவற்றை தன்னார்வலர்கள் அகற்றினர். இதனால் தற்போது அக்ரஹார சாமக்குளத்திற்கு 7 நீர்வழிப்பாதைகள் உள்ளன.


கோவை: கோவை, கோவில்பாளையம் அருகே 165 ஏக்கர் பரப்பளவு கொண்ட அக்ரஹார சாமக்குளம் ஏரி, கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பு சார்பில் புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருந்த 5 நீர் வழிப்பாதைகள் வழியாக ஏரிக்கு மழை நீர் வரும் நிலையில், மேலும் 2 நீர் வழிப்பாதைகள் இருப்பது ஆய்வில் தெரிந்தது.

இதனையடுத்து இன்று ஏப்ரல்.16 அப்பாதைகளில் இயந்திரங்களைக் கொண்டு குப்பை, மண்மேடு, புதர்கள் ஆகியவற்றை தன்னார்வலர்கள் அகற்றினர். இதனால் தற்போது அக்ரஹார சாமக்குளத்திற்கு 7 நீர்வழிப்பாதைகள் உள்ளன.

இதனால் இனி வரும் காலங்களில் இக்குளத்திற்கு எளிதில் நீர் நிரம்ப வாய்ப்புள்ளதால், அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள், தன்னார்வலர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தொடர்ந்து குளம் சீரமைப்பு பணியினை மேற்கொள்ள தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...