கோவை வரும் ரயில்களின் நேரம் மற்றும் சேவையில் மாற்றம் - கோவை தெற்கு ரயில்வே அறிவிப்பு

இருகூர் - போத்தனூர் வழியாக இயக்கப்படும் தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ், 17ம் தேதி கோயம்புத்தூர் ஜங்க்சனில் நிற்காது. இருகூர் - போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும் என்று கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் ஏப்ரல்.16 வெளியிட்டுள்ள அறிக்கையில், போத்தனூர் ரயில்வே யார்டில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளன. அந்த பொறியியல் பணிகளை எளிதாக்க, கீழே குறிப்பிட்டுள்ளபடி ஒரு சில ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

பின்வரும் ரயில்கள் 17.04.2024 அன்று இருகூர் - போத்தனூர் வழியாக இயக்கப்படும் ரயில் எண்.13351 தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ், 17ம் தேதி கோயம்புத்தூர் ஜங்க்சனில் நிற்காது. இருகூர் - போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும். போத்தனூர் ரயில் நிலையத்தில் ரயில் 2 நிமிடம் நிறுத்தப்படும்.

ரயில் எண்.06819 ஈரோடு - பாலக்காடு டவுன் ரயில் 17.04.2024 அன்று இருகூர் - போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும். அதனால் சிங்காநல்லூர், பீளமேடு, கோயம்புத்தூர் வடக்கு மற்றும் கோயம்புத்தூர் மத்திய ரயில் நிலையங்களில் ரயில் நிறுத்தப்படாது.

ரயில் எண்.16159 சென்னை எழும்பூர் - மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் 17.04.2024 அன்று இருகூர் - போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால் பீளமேடு, கோயம்புத்தூர் வடக்கு மற்றும் கோயம்புத்தூர் ௳த்திய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படாது.

ரயில் எண்.22504 திப்ருகர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், 17.04.2024 அன்று இருகூர் - போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும். அதன் விளைவாக கோயம்புத்தூர் மத்திய ரயில் நிலையத்தில் நிறுத்தம் தவிர்க்கப்படும்.

பின்வரும் ரயில் 17.04.2024 அன்று மாற்றியமைக்கப்படும். ரயில் எண்.06805 வழக்கமாக கோயம்புத்தூர் - ஷோரனூர் ரயில், கோயம்புத்தூர் மத்திய ரயில் நிலையத்தில் இருந்து 11.55 மணிக்குப் புறப்படும், 17ம் தேதி கோவையில் இருந்து மதியம் 1.05 மணிக்குப் புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...