திராவிடர் கழகத்தை யாராலும் அழிக்க முடியாது - கோவையில் ஆ.ராசாவை ஆதரித்து வைகோ பிரச்சாரம்

பிரதமரின் ஆணவம் அவரது தலையை பிடித்து ஆட்டுகிறது. திராவிடத்தை அழித்துவிட்டு தான் வருவேன் என்கிறார். என்னுடைய உடம்பில் ஓடுவதும் திராவிடம் ரத்தம் தான். யாராலும் அளிக்கவே முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை வீரபாண்டி பிரிவு பகுதியில் நீலகிரி பாராளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை செய்தார்.



அங்கு பேசிய வைகோ இந்தி திணிப்பை எதிர்த்து லட்சக்கணக்கான தொண்டர்கள் சிறை சென்று மாண்டார்கள்.



திராவிடர் கழகத்தை யாராலும் அழிக்க முடியாது அவர்கள் தான் அழிந்து போவார்கள். கொள்கை வேறுபாடு இருந்தாலும் பண்பாடுமிக்க நாகரிகம் மிக்க பிரதமராக மற்றவர்கள் இருந்தார்கள்.

பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர்காளுக்காக ஒரே சப்ஜெக்ட்டில் 13 முறை கவனிப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளேன். இதுவரை யாரும் 13 முறை ஒரே சப்ஜெக்ட்க்காக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்ததில்லை.

இலங்கையின் பூர்விக் குடிமக்கள் சிங்களவர்கள் அல்ல தமிழர்கள் தான் இதை சொன்னவர் இந்திரா காந்தி. நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை தனியாருக்கு விற்பதாக முடிவு எடுக்கப்பட்டது. அதனை வாஜ்பாய் தனது கோரிக்கையை ஏற்று நிறுத்தி வைத்தார்.

பிரதமர் என்றால் அப்படி இருக்க வேண்டும் இப்பொழுது இருக்கும். பிரதமர் ஆணவம் அவரது தலையை பிடித்து ஆட்டுகிறது. திராவிடத்தை அழித்துவிட்டு தான் வருவேன் என்கிறார். என்னுடைய உடம்பில் ஓடுவதும் திராவிடம் ரத்தம் தான் யாராலும் அளிக்கவே முடியாது.



அனைத்து மாணவர்களுக்கும் காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் ஸ்டாலின். இதனை அண்டை மாநிலத்தவர் தங்கள் மாநிலத்திலும் அறிமுகப்படுத்துகின்றனர். ஓராண்டில் 447 கோடி முறை பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.

வெளிநாடுகள் சென்று முதலீட்டை இழுத்து வந்துள்ளார் ஸ்டாலின். அதில் 97 லட்சம் கோடி முதலீடு தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி பெயரிலேயே அத்தனை மாநிலங்களும் அடங்கும். அதன் கூட்டணியிலே தான் இங்கு ஆ.ராசா போட்டியிடுகிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

திராவிடர் கழகத்திற்கு என்று ஒரு கொள்கை உள்ளது. திமுக கழகத்திற்கென்று ஒரு கொள்கை உள்ளது. இதில் கடவுள் மறுப்பை திமுக ஏற்கவில்லை.போன தேர்தலில் வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை கொண்டு வருவேன் ஒவ்வொரு அக்கவுண்ட்டிலும் 15 லட்சம் போடுவேன் என்று பொய் சொன்னவர் மோடி.

இங்கு ஆயிரக்கணக்கானோர் கூடியிருக்கிறார் என்றால் எனது பேச்சில் உண்மை உள்ளது சத்தியம் உள்ளது என்று அர்த்தம். எனவே ஆ. ராசாவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...