திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து மூலனூரில் அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி பிரச்சாரம்

செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திமுக வேட்பாளர் பிரகாஷ் உடன் மூலனூர் நகரம் மற்றும் கன்னிவாடி, நத்தப்பாளையம், பெரமியம் உட்பட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மூலனூர் ஒன்றியம் மற்றும் நகரப் பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வேட்பாளர் பிரகாஷ் உடன் மூலனூர் நகரம் மற்றும் கன்னிவாடி, நத்தப்பாளையம், பெரமியம், எழுகாம்வலசு, போளரை, எடைக்கல்பாடி, உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வாகனத்தில் நின்றபடி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...