இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்புராயனுக்கு ஆதரவாக திருப்பூரில் இருசக்கர வாகன பேரணி

அமைச்சர் சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் வேட்பாளர் சுப்பராயனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுப்பராயன் போட்டியிடுகிறார். வருகின்ற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பரப்புரை இன்று மாலை 6:00 மணியுடன் நிறைவடைகிறது.



தமிழக முழுவதும் இறுதி கட்ட பரப்புரை சூடு பிடித்துள்ள நிலையில், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகிகள் 1000க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பாண்டியன் நகர் பகுதியில் தொடங்கி திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளை மையப்படுத்தும் வகையிலான வாகன பேரணியில் ஈடுபட்டனர்.

இந்தியா கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளையும், மத்திய பாஜக தோற்கடிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஒலிபெருக்கியில் பேசியவாறு பேரணியாக வந்தனர். இந்த பேரணியில் மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், வேட்பாளர் சுப்பராயன், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மேயர் தினேஷ்குமார் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...