தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமாரை ஆதரித்து பைக் பேரணி

காவல்துறை அனுமதியை மீறி வாகனப் பேரணி நடைபெற்றது. இது குறித்து தேர்தல் கண்காணிப்பு குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் தாராபுரம் நகர அதிமுகவினர் 600 பேர் பைக் பேரணி நடத்தினர்.

புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி பொள்ளாச்சி ரோடு, பூக்கடைக்காரர், பெரிய கடை, வீதி டி எஸ் கார்னர், 5,சாலை சந்திப்பு புறவழிச் சாலை அலங்கியம் ரோடு, உடுமலை சாலை வழியாக பைக்கில் ஹாரன் ஒலி எழுப்பியவாறு இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



காவல்துறையினர் சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வாகனப் பேரணி ஆனது நடைபெற்றது. இது குறித்து தேர்தல் கண்காணிப்பு குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...